ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-12 19:28 GMT
திருமங்கலம், 
கூடக்கோவில் பகுதியை அடுத்த எலியார்பத்தி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பெருங்குடி தனிப்பிரிவு தலைமை காவலர் லிங்குசாமி வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர் வேனை சோதனை செய்தார். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலுசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று ரேஷன் அரிசி கடத்திய முனிச்சாலை பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 25), அனுப்பானடியை சேர்ந்த முனீஸ்வரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 75 மூடை அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்