மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேர் கைது
மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பள்ளிவாசல் 1-வது தெருவில் வசித்து வருபவர் கார்த்திகேயன். சம்பவத்தன்று இவர் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த 5 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக விரகனூர் குவாலிடி தெருவை சேர்ந்த ஜெயசூர்யா, செல்வகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.