மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-12 19:21 GMT
ராஜபாளையம்.
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
சிறுமிக்கு பாலியல் தொல்லை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். 
சம்பவத்தன்று அங்கு மன வளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமி வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
கைது
 அந்த சிறுமிக்கு பாதிரியார் ஜோசப்ராஜா பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த சிறுமி ெதரிவித்ததை தொடர்ந்து, அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் போில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி பாதிரியார் ஜோசப் ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்