அறந்தாங்கியில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு
அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே அழியாநிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர்கள் வீட்டுமனை (பிளாட்) போட்டு விற்பனை செய்து வருவதாக கூறியும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் செவ்வந்தி ஆறுமுகம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.