குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா; நாளை மறுநாள் நடக்கிறது

நாட்டார்மங்கலத்தில் குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-05-12 19:04 GMT
பாடாலூர், 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் பால்குட ஊர்வலமும், மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரவு 8 மணியளவில் சுவாமிக்கு குடி அழைப்பு நிகழ்ச்சியும், மாவிளக்கு மற்றும் பொங்கல் பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாரியம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 16-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது. 17-ந் தேதி செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்