ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி, காட்டுமன்னார்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பண்ருட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பண்ருட்டி நகர பொருளாளர் ரோஸ்மேரி தலைமை தாங்கினார். நகர செயலாளர் உமா வரவேற்றார். கடலூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஜீவானந்தம், வட்டார செயலாளர் சாந்தகுமார், அண்ணாகிராமம் வட்டார தலைவர் ஜி.முரளி, செயலாளர் சார்லஸ், பண்ருட்டி வட்டார துணைத்தலைவர் சுந்தர.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
முடிவில் வட்டார பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
காட்டுமன்னார்கோவில்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோவிலிலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டார தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் குருராஜன், செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சிற்றரசன், மாநில செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனார்கலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.