மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-12 18:33 GMT
விருத்தாசலம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளம்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலமான யாக்கை- வளமான வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். இளம்செஞ்சிலுவை சங்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், உதவி பேராசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சுந்தரசெல்வன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் செல்வம் கலந்து கொண்டு மருத்துவம் குறித்தும், உணவு முறை, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், நோய்நொடி இல்லாத வாழ்க்கை அமைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது உள்ளிட்ட மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். 

இதில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்