உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்

தா்மபுாி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-05-12 18:20 GMT
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செவிலியர் கண்காணிப்பாளர் கலைதேவி தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கலந்துகொண்டு செவிலியர் பணியின் சிறப்புகள் குறித்து பேசினார். செவிலியர் கண்காணிப்பாளர் கிரிஜா, மனமகிழ் மன்ற தலைவர் மீனாட்சி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கிருபா, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் கலைவாணி, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சாய்சுதா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியிலிருந்து செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் முன்பு செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் இனிப்பு வழங்கி உலக செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்