லாரி மோதி தொழிலாளி சாவு

கடத்தூர் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-05-12 18:20 GMT
மொரப்பூர்:
கடத்தூர் அருகே தேக்கல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50) இவரது மகன் வெங்கடேஷ் பெருமாள் (23) கடத்தூரில் உள்ள ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை தேக்கல்நாயக்கன்பட்டியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக கடத்தூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டலானூர் அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ் பெருமாள் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உரிழந்தார். விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்