செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
காரையூர்:
காரையூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார்ணாபட்டி ஓடுபாலம் அருகே வேகமாக லாரி ஒன்று வந்தது. இதைப்பார்த்த போலீசார் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரியை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து போலீசார் லாரியை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று ஆலம்பட்டி ரோட்டில் லாரியை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் செம்மண் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் லாரியின் உரிமையாளர் ஆலம்பட்டி துரை என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.