பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்கு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை,
தமிழக கவர்னர் ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பற்றி கருத்து ஒன்றை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கவர்னர் ரவியை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.