பனைமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

முதுகுளத்தூர் அருகே பனைமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-05-12 18:05 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் எடிசன் (வயது 28). அதே ஊரை சேர்ந்தவர் மோசஸ்(28). இவர்கள் இருவரும் முதுகுளத்தூரில் பொருட்களை வாங்கி விட்டு ஊருக்கு ேமாட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். கீழசாக்குளம் வளைவில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் திரும்பிய போது சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தினேஷ் எடிசன் பரிதாபமாக உயிரிழந்தார். மோசஸ் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்ைச பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்