போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 18:03 GMT
கரூர்
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருதை மகன் சங்கர் (வயது 22). இவர் 17 சிறுமியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் மூலம் கிடைத்த தகவலின் பேரில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பூங்கோதை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். 
இதேபோல் கடவூர் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் கோபால் (25). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கடவூர் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் மாரியம்மாள் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கோபால் மற்றும் கோபாலின் தந்தை ராஜலிங்கம், தாயார் லட்சுமி மற்றும் சிறுமியின் தாய், தந்தை என 5 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்