பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு

கரூர் அருகே பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-12 18:01 GMT
கரூர்
கரூர், 
3½ பவுன் சங்கிலி பறிப்பு
கரூர் வெண்ணைமலை அருகே உள்ள நாவல்நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 23). இவரது சகோதரி ஜெனிபர். இந்தநிலையில் ஷாலினி, ஜெனிபர் ஆகியோர் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஷாலினி ஸ்கூட்டரை ஓட்டினார். ஜெனிபர் பின்னால் அமர்ந்து வந்தார். கரூர் நாவல் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் ெஜனிபர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலி, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்தனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிபர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 3½ பவுன் சங்கிலியுடன் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஷாலினி வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்