வலங்கைமான்:-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் பல்வேறு இடங்களில் வலங்கைமான் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் மது பாட்டில்களை விற்ற வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று வலங்கைமானை அடுத்த நத்தம் கிராம பகுதியில் மது பாட்டில்களை ரகசியமாக விற்ற, சந்திரசேகரபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (52), கோவிந்தகுடி அருகே மதுபாட்டில் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சாமியய்யா (61), கும்பகோணம் மன்னார்குடி மெயின் ரோட்டில், செம்மங்குடி அருகே மதுபாட்டில்களை விற்ற ஆலங்குடி, காமராஜர் நகர், மேல தெருவை சேர்ந்த ராஜசேகரன் (37) ஆகியோரையும் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.