கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 17:39 GMT
நெல்லை:
நெல்லை பேட்டை பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற குரங்கு மாரியப்பன் (வயது 37). இவர் தென்காசி மாவட்டம் மற்றும் நெல்லை பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர மேற்குப்பகுதி துணை கமிஷனர் கே.சுரேஷ்குமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் இந்த பரிந்துரையை ஏற்று மாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் நேற்று மாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்