பரமத்திவேலூர் சந்தையில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர் சந்தையில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 638 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.89.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.35-க்கும், சராசரியாக ரூ.88.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்து 682-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 429 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.72.25-க்கும், சராசரியாக ரூ.85.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 455-க்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.