பேரூராட்சி மன்ற கூட்டம்
அரகண்டநல்லூரில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் வரவேற்றார். எழுத்தர் சுதாகர் பேரூராட்சி மன்ற தீர்மானத்தை வாசித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பேசினர். இதையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ். அன்பு கூறுகையில், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் முதல் கட்டமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் துணைத்தலைவர் கஜீதாபீவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேம்பு, சுந்தரமூர்த்தி, அனுராதா, சரவணன், மாணிக்கவாசகம், ஜெரினாபேகம், ரமேஷ், குமார், அனிதா, சுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.