சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளி கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 17:06 GMT
ஒசூர்:
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் சாம்ராஜ் என்ற பாண்டி (வயது 44), இவர், ஓசூர் சாந்திநகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் ஓசூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்