நிலத்தகராறில் மோதல்; தொழிலாளி கைது

நிலத்தகராறில் நடந்த மோதலில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 17:06 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ராமாபுரத்தை அடுத்த ஜக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்த தொழிலாளி சந்திரபிரகாஷ் (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக நடந்த தகராறில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது சந்திரபிரகாசை, சந்திரன் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்