தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-12 16:36 GMT
ஆம்பூர்

ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில்  வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்