பாம்பு கடித்து தொழிலாளி பலி
ரிஷிவந்தியம் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே பெரியபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் ஒருவரது வயலில் கரும்பு வெட்டி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பாம்பு கடித்ததால் கணேசனில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.