பொது வினியோகத்திட்ட குறைதீர்வு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர்வு முகாம் நடக்கிறது.

Update: 2022-05-12 16:33 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் சனிக்கிழமை திருப்பத்தூர் வட்டம், கந்திலி, நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூர் ஆகிய ரேஷன் கடைகளிலும், வாணியம்பாடி வட்டம், நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ஆம்பூர் வட்டம், சோமலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்திலும் பொது வினியோகத்திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. 

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய, நகல் குடும்ப அட்டை கோரி பதிவு செய்தல், நியாயவிலை கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து குறைகளுக்கு தீர்வு காணலாம்.

முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்