விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தின விழா
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தின விழா நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் குந்தவி தேவி தலைமை தாங்கி செவிலியர்களின் சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலர் சாந்தி, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், ஸ்ரீராம், நிர்வாக அலுவலர்கள் ஆனந்த ஜோதி, கவிஞர் சிங்காரம், தலைமை செவிலிய கண்காணிப்பாளர்கள் சாந்தி, கலா, செவிலியர் கண்கணிப்பாளர் கீதாகுமாரி தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள் அமராவதி, ஹெலன் மார்கிரேட், நாகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செவிலியர் ஹெமித்தா குமாரி நன்றி கூறினார்.