டிராக்டரில் மண் கடத்தியவர் கைது

டிராக்டரில் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 16:12 GMT
கடையம்:

கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால், பிள்ளையார்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக மண் கொண்டு சென்ற டிராக்டரை நிறுத்தி விசாரித்தார். விசாரணையில், டிராக்டர் டிரைவர் மேலமாதாபுரம் வேளார் தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் பாலமுருகன் (21) என்பதும், பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள செங்கல்சூளைக்கு மண் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். மேலும் மண் அள்ளப் பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்