அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள்

விழுப்புரம் அரசு பள்ளிகளுக்கு உபகரணங்களை லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2022-05-12 16:10 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.3.75 லட்சம் மதிப்பில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், தனது மேம்பாட்டு நிதியிலிருந்து நேற்று வழங்கி, அதனை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, வளவனூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சி, நகர செயலாளர் ஜீவா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பழனிவேலு, நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன், வார்டு செயலாளர்கள் பூந்தோட்டம் சண்முகம், ரகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்