ஆறுமுகநேரியில் இளம் பெண் மீது தாக்குதல்
ஆறுமுகநேரியில் இளம் பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் முத்துவீரன். இவரது மனைவி தங்க பாரதி (வயது 24).் இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரிமுத்து மனைவி காளியம்மாள். இவர் அடிக்கடி தங்கபாரதியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் தங்கபாரதியிடம் காளியம்மாள் தகராறு செய்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தங்கபாரதியை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலொற்பவம் வழக்குப்பதிவு செய்து காளியம்மாளை தேடி வருகிறார்.
-----------