நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-05-12 16:07 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் லதாபூரணம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 1,282 முதுகலை மற்றும் இளங்கலை மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். 
அப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு பட்டம் பெறும் மாணவிகள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். இந்த சமுதாயத்தில் எந்த உயரத்தை எட்ட வேண்டுமோ அதை உங்களின் செயல்களால் நீங்கள் பெற்றுக் கொள்கின்ற நேரம் வந்துவிட்டது. நீங்கள் படித்த படிப்பை சரியான சமயத்தில், சரியான முறையில் பயன்படுத்துவதில்தான் உங்கள் வெற்றியும், எதிர்கால இந்தியாவின் வெற்றியும், மனித இனத்தின் வெற்றியும் அமைந்திருக்கிறது. வருங்காலத்தில் அடுத்த தலைமுறை மகிழ்ச்சியாக வாழ புதிய வழித்தடங்களை உருவாக்குவது உங்கள் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார். விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்