இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் கிராம உதயம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அரிமா சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், அரிமா சங்க செயலாளர் சங்கர், மகாத்மா காந்தி சேவா தலைவர்-முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வன்னிக்கோனேந்தல் மனோகர், சமூக ஆர்வலர் பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் சேத்தன் தலைமையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 35 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கிராம உதயம் ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.