பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, இலவச மருத்துவ முகாம் சுஸ்லான் பவுண்டேஷன் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. மருக்காலங்குளம் ஊராட்சி மன்ற தலைவி மருதநாச்சியார் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகன், கிராம வளர்ச்சி குழு தலைவர் முருகன், ஆசிரியர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுஸ்லான் பவுண்டேசன் மேலாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். இதில் மகளிருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை குறித்து டாக்டர் மணிகண்டன் தலைமையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.