பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின கொண்டாட்டம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின கொண்டாட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அரசு ஆஸ்பத்திரி மருத்துவ இருப்பிட அதிகாரி சரவணபிரகாஷ் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரசவ வார்டு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் டாக்டர் கார்த்திகேயன், தலைமை செவிலியர் ராமாத்தாள், சித்ரா, உமாமகேஸ்வரி, ரத்த வங்கி செவிலியர் தனலட்சுமி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ், ராமர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், வடுகபாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்திலும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கேக் வெட்டி செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.