முதல் தலைமுறை தொழில் முனைவோர் வங்கிகள் மூலமாக கடன் பெறலாம்

முதல் தலைமுறை தொழில் முனைவோர் வங்கிகள் மூலமாக கடன் பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-12 15:24 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல் தலைமுறை தொழில் முனைவோர் 14 நபர்களுக்கு சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க வங்கிகள் மூலமாக கடன் வழங்க மானிய நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடியே 38 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் 50 சதவீதம் மகளிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டாக தொழில் தொடங்க அனுமதி உண்டு.

விண்ணப்பங்களை https://www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையத்தின் மூலமாக ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், கல்வி தகுதிச்சான்று, கல்வி மாற்றுச் சான்று, வகுப்பு சான்றிதழ், விலைப்பட்டியல், திட்ட அறிக்கை ஆகியன பதிவேற்றம் செய்ய வேண்டும். திட்டங்களில் சிறப்பு பிரிவினருக்கான கூடுதல் சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராணிப்பேட்டையில் தேவராஜ் நகர், ஐ.வி.பி.எம் எதிரில் உள்ள மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர், பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்