கோவில்பட்டியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-05-12 15:22 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுக்கிராமம் மெயின் ரோட்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கோமதி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ரஞ்சிதம், தமிழரசி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்