போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க.வினர் புகார்
தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கனிமொழி மற்றும் தி.மு.க. ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனா்.
அதில் கூறிஇருப்பதாவது:-
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசி விமர்சித்து உள்ளார்.
அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் நாங்கள் உள்பட தி.மு.க. தொண்டர்கள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளோம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி அவதூறாக பேசிய சுபாஷ்சந்திரபோஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது தி.மு.க.வினர் பலர் உடன் சென்றனர்.