வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-12 15:02 GMT
நாங்குநேரி:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வானமாமலை பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்து வந்தன. முதல் மற்றும் 5-வது திருநாளில் பெருமாள் தாயாருடன் கருட வாகனத்திலும், 7-வது திருநாளில் தங்க சப்பரத்திலும், 8-வது நாள் வெட்டும் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. 10-ம் நாள் காலை 10.30 மணியளவில் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் சென்று மாலை 3.30 மணிக்கு நிலையத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்