புள்ளிமானை சுட்டுக்கொன்றவர் கைது

ஒடுகத்தூர் புள்ளிமானை சுட்டுக்கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-12 14:58 GMT
அணைக்கட்டு

ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள காப்புக் காடுகளில் மான்களை மர்மநபர்கள் வேட்டையாடி வருவதாக மாவட்ட வன பாதுகாவலர் சுஜாதாவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வனபாதுகாவலர் முரளிதரன் அறிவுரையின்படி, ஒடுகத்தூர் வனச்சரகர் சரவணன், பிரதீப் குமார், நிர்மல் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அண்ணாதுரை, சதீஷ்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை ஒடுகத்தூர் அடுத்த கருத்த மலை அரசம்பட்டு பகுதியில் பாம்பு பாறை வழி சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காட்டுக்குள் நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டிரு்தவர்களை வனத் துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் தீர்த்தம் கிராமம் மேல் அரசம்பட்டு பெரியசாமி என்பவர் மகன் பாக்கியராஜ் (வயது 36) என்பதும், உரிமம்இல்லாத நாட்டு துப்பாக்கியால் புள்ளிமானை சுட்டுக் கொன்றதும் தெரியவந்தது. 

 அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் மான் தலை ஆகியவற்றை பறிமுதல் செய்துதப்பி ஓடிய அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், பார்த்திபன், அன்பு, ஜெயராஜ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்