ரூ.1¾ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

கலசபாக்கத்தில் ரூ.1¾ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-12 14:57 GMT
கலசபாக்கம்

கலசபாக்கத்தில் ரூ.1¾ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

 தார்சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர், கலசபாக்கம் மெயின் ரோட்டில் இருந்து பஜார் வீதியில் செல்லும் போது அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை சாலை போடுவதற்கு முன்பே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை பணி தொடங்கி இருக்க வேண்டும்.

 மேலும் கல்வெட்டு கட்டப்பட்டு வரும் இடத்தில் கல்வெட்டின் நீளம், அகலம் பெரிதாகவும், கால்வாயின் அகலம் குறுகியும் உள்ளதை பார்த்து தாசில்தாரை அழைத்து கால்வாயின் அகலம் குறித்து கேள்வி எழுப்பினார். 

 ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

அப்போது 9 மீட்டர் அகலம் கால்வாய் உள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 1½ மீட்டர் அகலம் மட்டுமே இருந்தால் எப்படி தண்ணீர் செல்லும் எந்த பக்கத்தில் பார்த்தாலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த கால்வாயின் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுங்கள் என்று வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார். 

அதைத் தொடர்ந்து கலசபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். 
அப்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், கோட்ட பொறியாளர் முரளி, ஒப்பந்ததாரர்கள் ராமஜெயம், மகேஷ் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்