குளத்துக்குள் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் கல்லூரி மாணவர் சாவு

திசையன்விளை அருகே குளத்துக்குள் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-12 14:54 GMT
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு பெட்டைகுளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அஜய்குமார் (வயது 21). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பசுவழி ஊரை சேர்ந்த மற்றொரு முருகன் மகன் சிவகணேஷ் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு அஜய்குமார், சிவகணேஷ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தனர். பொட்டைகுளம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் உள்ள குளத்துக்குள் விழுந்தது. 

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அஜய்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவகணேஷ் படுகாயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


மேலும் செய்திகள்