இல்லத்தரசிகளுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ அளிக்கும் தக்காளி கிலோ ரூ.60-ஐ தாண்டியது

தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-05-12 18:45 GMT
மன்னார்குடி:-

தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தக்காளி விலை உயர்வு

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இன்றி சமையல் கிடையாது என்பதுதான் உண்மைநிலை. அந்த அளவிற்கு சமையலுக்கு முக்கியமான தக்காளி மன்னார்குடி உழவர் சந்தையில் நேற்று கிலோ ரூ.64-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறி வருவதால் தக்காளி,  இல்லத்தரசிகளுக்கு தினசரி அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது. 

காரணம்

தக்காளி தேவை அதிகம் இருக்கும் நிலையில் உற்பத்தி 10 சதவீதம் அளவிற்கே உள்ளதும், வெளி மாநில வரத்தை அதிகமாக சார்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என காய்கறி விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.  கோடையில் தக்காளி உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருவதால், விலை உயர்வு மேலும் ஓரிரு மாதங்களுக்கு நீடிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த கூடுதல் தக்காளியை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்