நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்

நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்

Update: 2022-05-12 14:44 GMT
கூடலூர்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இந்த நிலையில் இன்று கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஓவேலி பேரூராட்சி சீபுரத்துக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. 

அப்போது கூடலூர் சக்தி விநாயகர் கோவில் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் முன் பக்க டயர் பஞ்சராகி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். புறப்பட்ட சில நிமிடங்களில் பஞ்சர் ஆகி நின்ற அரசு பஸ்சால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மேலும் செய்திகள்