நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேக விழா
நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 4-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது.