பழனியில் அச்சக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பழனியில் பிரிண்டிங் பொருட்களுக்கான வரியை குறைக்க கோரி அச்சக உரிமையாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-12 14:01 GMT
பழனி: 

பழனி நகர அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பழனி குளத்து ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பிரிண்டிங் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், அதற்கான ஜி.எஸ்.டி.யும் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும்,  அதனை குறைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பழனி பகுதி அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்