கோவை திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட மேம்பாலங்கள் எப்போது திறக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்

கோவைதிருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட மேம்பாலங்கள் எப்போது திறக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்

Update: 2022-05-12 13:42 GMT

கோவை

கோவை -திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட மேம்பாலங்கள் எப்போது திறக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

2 மேம்பாலங்கள்

கோவை நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்த வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

அதற்கு தீர்வு காணும் வகையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப் பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை- திருச்சி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத் தின் அருகே இருந்து ராமநாதபுரம் பங்குச்சந்தை அலுவலகம் வரை ரூ.252 கோடியில் 3 கி.மீ. தூரத்துக்கு   மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 

அது போல் கோவை- மேட்டுப்பாளை யம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் 1.2 கி.மீ. தூரத்துக்கு ரூ.60 கோடியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஆனால் அந்த 2 மேம்பாலங்களும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. 

இதனால் பாலம் கட்டி முடித்தும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

 மேலும் அவர்கள், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மேம்பாலங்களை   ஏக்கத்துடன் பார்த்தபடி செல்லும் நிலை உள்ளது.


எனவே கட்டி முடிக்கப்பட்ட 2 மேம்பாலங்களையும் பயன்பாட் டுக்கு திறந்தால் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது

திறக்க வேண்டும்

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. 

கவுண் டம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை பயன் பாட்டுக்கு திறந்தால் அங்கும் போக்குவரத்து நெரிசல் இருக்காது.


ஆனால் அந்த மேம்பாலங்கள் இன்னும் ஏன் திறக்கப்படாமல் உள்ளது என்று தெரியவில்லை. 

எனவே அதிகாரிகள் இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக அந்த 2 மேம்பாலங்களையும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சர்வீஸ் சாலை

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருச்சி ரோடு மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் சர்வீஸ் சாலை போட வேண்டும். 

அது முடிந்ததும் விரைவில் அந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அதுபோன்று கவுண்டம்பாளையம் மேம்பாலமும் உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்