கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2022-05-12 13:42 GMT
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன்படி கடந்த 6-ந் தேதி பூவோடு எடுத்தல், 11-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேகம், விளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் நேற்று பொங்கல் வைத்தல், அக்னி கரகம் எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு, அம்மன் பவனி வருதல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்