பிளஸ்1 ஆங்கிலம் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்
கோவை
பிளஸ்-1 ஆங்கிலம் தேர்வு எளிதாக இருந்தது என்று மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலம் தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 119 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், 37 ஆயிரத்து 361 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
பிளஸ்-1 ஆங்கில தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி யது. வினாத்தாள் வழங்கப்பட்டதும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் விடைகளை எழுதினர்.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 ஆங்கில தேர்வை மொத்தம் 35 ஆயிரத்து 573 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 1,788 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பறக்கும் படை ஆய்வு
மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
நேற்று நடந்த பிளஸ்-1 ஆங்கில தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி பள்ளி பிளஸ்-1 மாணவர் குமரன்
இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது. பாடத்துக்கு வெளியே இருந்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அந்த கேள்விகள் சொந்த நடையில் எழுதுமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே அந்த கேள்விகளும் எளிதாக தான் இருந்தன.
மாணவர் ஆதித்யா
5 மதிப்பெண் கேள்வியில் இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து கேட்கப்பட்டு இருந்தது. அது மிகவும் எளிதாக இருந்ததால் அது குறித்து எழுதினேன்.
எளிதாக இருந்தது
சந்தோஷ்குமார்:- வினாத்தாளில் பிரிவு 3-ல் 37-வது கேள்வியாக சாலை பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்டு இருந்தது. 3 மதிப்பெண் ணுக்கு கேட்கப்பட்ட இந்த கேள்வி எளிதாக இருந்ததால் நான் அதை எழுதினேன். எளிதான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்த தால் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சித்தீஸ்வர்
15 மதிப்பெண்ணுக்கு சொந்த நடைமுறை அடிப் படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது சாலை பாது காப்பு, ஏ.ஆர்.ரகுமான், பணியாளர்கள் வரவில்லை என்றால் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவது போன்ற கேள்விகள்தான் கேட்கப்பட்டன.
அவை எளிதாக இருந்ததால் மதிப்பெண் முழுமையாக கிடைத்துவிடும். இவ்வாறு மாணவ-மாணவிகள் கூறினர்.