அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச செவிலியர் தினம்

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-05-12 13:02 GMT
தென்காசி:

ஒவ்வொரு ஆண்டும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாள் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு காலையில் ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியர்கள் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பேரணி நடைபெற்றது. 

மதியம் நடைபெற்ற விழாவிற்கு தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜன் தலைமை தாங்கினார். டாக்டர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் டாக்டர் ராஜேஷ், குத்துக்கல்வலசை செயின்ட் மேரிஸ் நர்சிங் பயிற்சி பள்ளி தாளாளர் டாக்டர் பவுலின் சொர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. 
விழாவில் ஆஸ்பத்திரியின் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, ஜெகதா, திருப்பதி, வசந்தி, முத்துலட்சுமி மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்