‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: குண்டாறு அணை உட்பக்க சுவர் சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குண்டாறு அணையின் உட்பக்க சுவா் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.;

Update:2022-05-12 18:26 IST
செங்கோட்டை:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குண்டாறு அணையின் உட்பக்க சுவா் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

குண்டாறு அணை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 36.10 அடியாகும். குண்டாறு அணை மூலம் நேரடியாக 731 ஏக்கர் நிலமும், மறைமுகமாக 391 ஏக்கர் நிலமும் என மொத்தம் 1,122 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

மேலும், இந்த அணையின் மூலம் தஞ்சாவூர்குளம், நிறைகுளம், கீழக்கொட்டாகுளம், மேலகொட்டாகுளம் உள்பட மொத்தம் 12 குளங்கள் பயன்பெறுகிறது. பல்வேறு கிராமங்களில் குடிநீருக்காகவும் இந்த அணையின் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

சுவரில் சேதம்

இந்த நிலையில் அணையின் உட்பக்க சுவரில் கற்கள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. அணை பகுதியும் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது. அணையில் சேதம் அடைந்த பகுதியை மழை காலத்திற்கு முன்பாகவே உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. 

சீரமைப்பு

இதன் எதிரொலியாக குண்டாறு அணையின் சேதமான உட்பக்க சுவரை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் நேற்று ஈடுபட்டனர். 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்