மோட்டார் சைக்கிள் மோதியதில் பள்ளி மாணவர் படுகாயம்

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Update: 2022-05-12 12:41 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்ற ராஜா. இவருடைய மகன் மகாராஜா (வயது 14). இவர் தூத்துக்குடியில் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த ஞானராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த முத்தையாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்த அந்தோணி மகன் சரண்டேவிட் என்பவரின் மோட்டார் சைக்கிள், மகாராஜா வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த பள்ளி மாணவர் மகாராஜாவை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------

மேலும் செய்திகள்