கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
திருவண்ணாமலையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பை உதவி கலெக்டர் வெற்றிவேல் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தாசில்தார் சுரேஷ், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், தலைமையிடத்து துணைத் தாசில்தார் சரளா ஆகியோர் பங்கேற்றனர். அதில் 43 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்ட துணை ஆய்வாளர் சையத்ஜலால் தலைமையில் சார் ஆய்வாளர்கள் வேணுநாதன், குமார் ஆகியோர் நில அளவை குறித்த பயிற்சியை அளித்தனர்.
திருவண்ணாமலை கோட்டத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல் போன்ற பணிகள் குறித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி தொடர்ந்து 7 நாட்கள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.