திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிியல் வினாடி வினா போட்டி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாணவர் செயலாளர் ச.பாத்திமா ஜஹ்ரா வரவேற்று பேசினார். மாணவி இ.கவிதா மன்ற அறிக்கை வாசித்தார். போட்டியை வணிக நிர்வாகவியல் துணை பேராசிரியை ரா.தெயவ வீரலட்சுமி நடத்தினார். தலா 3 மாணவிகள் கொண்ட 5 அணிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இறுதி சுற்றில் `ஏ' அணி முதலிடத்தையும், `டி' அணி 2-வது இடத்தையும் பிடித்தன. மாணவி அ.டயானா மெர்சி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் மா.சண்முகவல்லி வழிகாட்டுதல்படி பேராசிரியைகள் ஆ.ஜெயந்தி, பா.கவிதா, பி.பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோன்று, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் அகத்தர உறுதிக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து முதலுதவி என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி கலந்து கொண்டு பல்வேறு வகையான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ரா.திலகவதி, இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் பூ.ஜமுனா, ஜெ.ஆனந்திபானு ஆகியோர் செய்திருந்தனர்.